.
இப்போதெல்லாம் எல்லாம் பிடிக்கறது . . . . .
மலர்களைப் பிடிக்கறது எனக்கு,
அதன் வாசனைக்காக அல்ல ......
- நீ சூடிக்கொள்வதால் !!!
தென்றலைப் பிடிக்கறது எனக்கு,
அது ஜில்லென்று உரசி விளையாடுவதால் அல்ல . . . . .
- உன்னைக் குளிர்விப்பதால் !!!
மழையைப் பிடிக்கிறது எனக்கு,
அது மக்களை வாழ வைப்பதால் அல்ல . . . . .
- நீ நணைந்து விளையாடுவதால் !!!
மயிலைப் பிடிக்கிறது எனக்கு,
அதன் அழகிற்காக அல்ல . . . . .
- அதன் தோகை உன் கூந்தலை போலிருப்பதால் !!!
நிலவைப் பிடிக்கிறது எனக்கு,
கவிஞன் வர்ணிப்பதால் அல்ல . . . . .
- நான் அதில் உன் முகம் காண்பதால் !!!
வாழப் பிடிக்கறது எனக்கு,
எனக்காக அல்ல . . . . .
- நீ எனக்காக வாழ்கிறாய் என்பதற்காக !!!!!
with Dreams . . .
- Siva
Friday, July 9, 2010
Wednesday, July 7, 2010
சிட்டுக்குருவிகள் ? ? ?
அபூர்வமான பறவைகளை ஆர்வத்துடன் பார்க்கும் நாம், நம் அருகிலேயே இருந்து சிறிது சிறிதாக குறைந்து இன்று காணாமலே போய் விட்ட சிட்டுக்குருவிகளை பற்றி ஏன் நாம் யோசிக்கவில்லை.
சிறு வயதில் நம் வீட்டுத் திண்ணையில் வந்து திரியும் சிட்டுக்குருவிகளை இன்று ஏன் நம்மால் பார்க்க முடிவதில்லை.எங்கே சென்று விட்டன அவை. "அம்மா, அவர்கள் வீட்டு மரத்தில்தான் குருவிகள் வருமா, நம் வீட்டு மரத்தில் வராதா?" என்று கேள்விகள் கேட்ட நாட்களை நினைக்கையில் மனம் சற்று வாடுகிறது.
உலகில் உள்ள குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. பிற மாவட்டங்களில் பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது. ஆனால் பசுமையான இடங்கள் எங்கே உள்ளன. அவைகள் எங்கே தான் போயின.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் படி குருவிகள் இனம் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. செல்போன் கோபுரங்களாலும், பிற காரணங்களாலும் குருவிகள் இனம் அடியோடு அழிந்து வருவதாக கூறியுள்ளது. முக்கியமாக மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவைசிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.
கடந்த 2008-2009 ல் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் படி கேரளத்தில் குருவிகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கொல்லத்தில் உள்ள எஸ்.என் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் டாக்டர் சயீனுதின் கூறியுள்ளார்.
சிட்டுக் குருவிகள் மறைவதற்கு/மறைந்ததற்கு முக்கிய காரணம் பூச்சிக் கொல்லி மருந்துகளும் கார்களில் உபயோகப் படுத்தப் படும் ஈய ரசாயனம் (Tetra ethyl lead) கலந்த பெட்ரோல் எரியும் போது உண்டாகும் மிதைல் நைட்ரைட் (methyl nitrite) சிறு பூச்சி புழுக்களுக்கு எமனாகும். அப்படித் தாக்கப் பட்ட புழு பூச்சிகளைத் தங்கள் குஞ்சுகளுக்கு சிட்டுக் குருவிகள் இரையாகக் கொடுப்பதால் குஞ்சுகள் இறக்கின்றன. இதனால்தான் சிட்டுக் குருவிகள் வெகு வேகமாக எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்று. ரசாயனப் பூச்சி கொல்லி மருந்துகளும், ஈயம் கலந்த பெட்ரோலும் முற்றிலுமாகத் தடை செய்யப் படாவிட்டால் பறவைகள் என்றால் என்ன என்று நம் பிற்கால சந்ததியினர் கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் நம்மாலானதைச் செய்ய்ய வேண்டியது மிக மிக அவசியம். இல்லை என்றால் குருவிகளை மட்டும் அல்ல பறவை இனங்களையே முழுதும் நாம் மறந்து விட வேண்டியது தான்.
Posted by
Siva
at
10:23 PM
0
comments
Labels:
bird,
dying birds,
falling bird count,
indian birds,
sparrows
Tuesday, July 6, 2010
I want to go back to the time when.....
I Want To Go Back To The Time
When GETTING HIGH Meant On A SWING - Not PROMOTIONS.
When DRINKING Meant RASNAORANGE, - Not BEERS Or WHISKEYS.
When DAD Was The Only HERO - Not DEPP Or TOM.
When LOVE Was MOM’S HUG, - Not The GIRL / BOY-FRIENDS’.
When DAD’S SHOULDER Was The HIGHEST PLACE On The Earth - Not Your DESIGNATION.
When Your WORST ENEMIES Were Your SIBLINGS - Not Your MANAGER.
When The Only Thing That Could HURT Were BLEEDING KNEES - Not The TEARS Falling Down Your Cheeks.
When The Only Things BROKEN Were TOYS - Not The DYING HEARTS.
And When GOOD-BYES Meant TILL TOMORROW - Not For YEARS & YEARS.
Subscribe to:
Posts (Atom)