.
இப்போதெல்லாம் எல்லாம் பிடிக்கறது . . . . .
மலர்களைப் பிடிக்கறது எனக்கு,
அதன் வாசனைக்காக அல்ல ......
- நீ சூடிக்கொள்வதால் !!!
தென்றலைப் பிடிக்கறது எனக்கு,
அது ஜில்லென்று உரசி விளையாடுவதால் அல்ல . . . . .
- உன்னைக் குளிர்விப்பதால் !!!
மழையைப் பிடிக்கிறது எனக்கு,
அது மக்களை வாழ வைப்பதால் அல்ல . . . . .
- நீ நணைந்து விளையாடுவதால் !!!
மயிலைப் பிடிக்கிறது எனக்கு,
அதன் அழகிற்காக அல்ல . . . . .
- அதன் தோகை உன் கூந்தலை போலிருப்பதால் !!!
நிலவைப் பிடிக்கிறது எனக்கு,
கவிஞன் வர்ணிப்பதால் அல்ல . . . . .
- நான் அதில் உன் முகம் காண்பதால் !!!
வாழப் பிடிக்கறது எனக்கு,
எனக்காக அல்ல . . . . .
- நீ எனக்காக வாழ்கிறாய் என்பதற்காக !!!!!
with Dreams . . .
- Siva
Friday, July 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment